• May 17 2026

‘ஜன நாயகன்’ வெளியீடு தள்ளிப் போனதால் ரூ100 கோடி இழப்பா.? கசிந்த தகவல்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு பொங்கலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பாக காணப்பட்டது ஜனநாயகன் திரைப்படத்தின் ரிலீஸ். ஆனால் அந்த படத்தின் சென்சார் பிரச்சினையால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகாததால் திரையரங்கு உரிமையாளர்கள் 100 கோடிக்கு மேல் இழப்பு அடைந்துள்ளதாக தகவல் கசிந்து உள்ளது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸ் செய்யப்பட வேண்டிய இந்த படம், தயாரிப்பு நிறுவனம் மற்றும் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் இடையே நிலை நிலவும் இழுபறியால் தள்ளிப்போனது.  

இதை தொடர்ந்து சென்னை மண்டல தணிக்கை அதிகாரி ஒருவர் இந்த விவகாரம் தொடர்பில் பதிலளிக்க மறுத்து, தணிக்கை தொடர்பான விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும், சான்றிதழ் வழங்கப்படும் வரை எந்த தகவலும் வெளியிட முடியாது, படம் தணிக்கை செய்யப்பட்டதும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று தெரிவித்தார்.  

அதேபோல தயாரிப்பு நிறுவனம் கே.வி.என்., படத்தை மறுசீராய்வு குழுவிற்கு அனுப்ப ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டாலும், இதையும் தணிக்கை வாரியம் உறுதிப்படுத்தவில்லை. இப்படம் தள்ளிப்போனால், அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகவிருந்த பிற படங்களின் அட்டவணை சீர்குலைந்துள்ளது. 

ஜனநாயகன் படம் பொங்கலில் ரிலீஸ் ஆகி இருந்தால் தமிழகத்தில் மட்டுமே ரூ150–200 கோடி வசூல் செய்திருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது.  

அதேவேளை, சமீபத்தில் விஜய் வழங்கிய பேட்டி ஒன்றில், அரசியலில் உள்ளதால் இந்த படம் ரிலீஸ் ஆகாததற்கு வருந்தியதாகவும், தயாரிப்பாளர் சந்திக்கும் சிரமங்களை நினைத்து வருந்தியதாகவும் தெரிவித்துள்ளார்.  தற்போது இந்த வழக்கு விசாரணை சென்னை நீதிமன்றம் தனி நீதிபதியின் விசாரணைக்கு மாறி உள்ளது.

Advertisement

Advertisement