நடிகர் ராஷி கன்னா தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகை. இவர் நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்திருந்தார். மேலும் சுந்தர் சி. இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அரண்மனை 4 படத்திலும் நடித்திருந்தார். இதனால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி உள்ளார்கள்.

சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷன் நேரத்தில் காதல் தோல்வி பற்றி கூறியுள்ளார். '' நான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன். ஆனால் அந்த காதல் நிலைக்கவில்லை. தோல்வி அடைந்துவிட்டது. அந்த காதல் தோல்வி அடைந்ததால் மிகுந்த மனவேதனை ஏற்பட்டது. ரொம்ப ஒரு மாதிரி ஆகிவிட்டேன். அந்த அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன். வலுவானவளாக மாறினேன்.

நான் காதல் தோல்வியால் கஷ்டப்பட்ட நேரத்தில் என் குடும்பத்தாரும், நண்பர்களும் தான் ஆதரவாக இருந்தார்கள். அதற்காக அவர்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். காதல் தோல்விக்கு பிறகு படங்களில் அதிகம் கவனம் செலுத்தினேன். வேலை எனக்கு ஆறுதலாக இருந்தது. எனக்கு திரையுலகை சேராத நண்பர்களே அதிகம்.
d_i_a
அவர்கள் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். இவர் கூறிய காதல் தோல்வி கதையை கேட்டு அவரின் ரசிகர்கள் தீவிரமாக யார் அந்த நபர் என் செல்லத்தை இவளோ கஷ்ட்டப்படுத்தியது என கடுமையாக தேடி வருகிறார்கள். ஒரு துரும்பு கிடைத்தால் போதும் விளாசி விடுவார்கள் நெட்டிசன்கள்.
 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!