பிக்பாஸ் தமிழ் சீசன் 9 முடிந்து ஒரு மாதத்தை கடக்கவுள்ள நிலையில், போட்டியாளர்களுக்கிடையிலான சர்ச்சைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
ஆரம்பத்தில் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய விஜே பார்வதி மற்றும் கமருதீன் ரசிகர்களை சந்தித்த நிலையில், பல்வேறு கருத்துக்களை கூறி சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், ரம்யா ஜோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாண்ட்ரா தொடர்பான சர்ச்சைகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். அதன்படி பிரஜின் ரம்யா ஜோவுக்கு அனுப்பியதாக கூறப்படும் ஆடியோ ஒன்றை ரம்யா ஜோ வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோவில், 'ரம்யா, நீ மீண்டும் உள்ளே போகும் போது சாண்ட்ராவிடம் பணப்பெட்டியை எடுக்க சொல்ல வேண்டாம். அதை வேறு யாராவது எடுத்துக்கொள்ளட்டும்' என பிரஜின் கூறுவது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பிக் பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் பேட்டி கொடுத்து வரும் நிலையில் பிரஜின், சாண்ட்ராவும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதன் போதே சாண்ட்ரா மீண்டும் பொய்களை கூறி வருகிறார் என ரம்யா ஜோ சுட்டிக் காட்டி, பிரஜின் அனுப்பிய ஆடியோவை வெளியிட்டு உள்ளார்.
மேலும் , எப்போதும் மற்றவர்களை குறை சொல்வதை விட, நம்மை ஒழுங்காக வைத்துக்கொள்வது நல்லது என ரம்யா ஜோ பதிவிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Listen News!