• Feb 06 2026

அடேங்கப்பா.! ரூமுக்குள்ள ரொமான்ஸைக் கொட்டித் தீர்த்த கதிர்.! வெட்கத்தில் ராஜி...

subiththira / 14 hours ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, ராஜி ரோட்டில நடந்து வரும் போது கதிரைப் பார்த்து ரூமுக்கு போய் மட்டும் ஏதாவது செய்யவா போற என்று கேட்கிறார். பின் ரூமுக்கு போன கதிர் ராஜியோட கையைப் பிடிச்சுக் கொண்டு விடமாட்டேன் என்கிறார். அப்புடியே ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து கதிர் கல்யாணத்துக்கு முன்னாடி உன்ன எனக்கு பிடிக்காது தான் கல்யாணமும் பிடிக்காமல் தான் பண்ணேன்.

ஆனா, இப்ப இந்த நிமிஷம் எனக்கு ரொம்ப பிடிச்சது யாரு என்று கேட்டால் அது நீதான் என்கிறார். மறுபக்கம் அரசி செந்திலைப் பார்த்து என்ன அதிசயமா இங்க எல்லாம் வந்திருக்க என்று கேட்கிறார். அதுக்கு செந்தில் நம்ம வீட்டுக்கு வாறதில என்ன அதிசயம் இருக்கு என்று கேட்கிறார். அதைத் தொடர்ந்து கோமதி இவ்வளவு லேட்டா வீட்ட போனால் அவள் அங்க தனியா இருக்கமாட்டாளோ என்று சொல்லிப் பேசுறார்.


அதுக்கு செந்தில் அவள் தனியா எல்லாம் இருப்பாள் என்கிறார். அதைக் கேட்ட உடனே கோமதி அவளை பற்றி உனக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லையா என்று கேட்கிறார். பின் செந்தில் இதைக் கேட்கத் தான் என்னைக் கூப்பிட்டனீங்களா என்கிறார். அதுக்கு கோமதி நீ அவள் கிட்ட எதுக்காக பேசுறேல என்று கேட்கிறார். செய்த வேலைக்குத் தான் பேசுறேல என்கிறார் செந்தில்.

அப்புடியே ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் கதைச்சுக் கொண்டிருக்கிறார்கள். பின் கதிர் ராஜியை சைட் அடிச்சுக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து செந்தில் வீட்ட போய் மீனாவைப் பார்த்து நான் பேசாமல் இருக்கிறது உன்னால தாங்கிக்க முடியாம அம்மா கிட்ட போய் சொன்னியா என்று கேட்கிறார். அதுக்கு மீனா நான் சொல்லேல என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement