• Mar 08 2026

என் கேரியரில் திருப்பத்தை ஏற்படுத்தியது விஜய் தான்.. மனம் திறந்த நடிகர் விஜய் ஆண்டனி.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இளம் வயதில் இருந்து தனக்கென ஒரு வித்தியாசமான இடத்தை உருவாக்கி கொண்ட விஜய் ஆண்டனி, சமீபத்தில் தனது கேரியர் பற்றிய ஒரு முக்கியமான பேட்டியை அளித்துள்ளார். 

விஜய் ஆண்டனி கூறியதாவது, “என் கேரியர்லேயே மிகப்பெரிய படம்னா அது வேட்டைக்காரன் தான். அந்தப் படத்தோட வாய்ப்பு எனக்கு இயக்குநர் மூலமாவோ, தயாரிப்பாளர் மூலமாவோ கிடைக்கல. அது விஜய் சார் மூலமாகத் தான் கிடைச்சது. விஜய் சார் தான் விஜய் ஆண்டனி நல்லா பண்றாரு அவருக்கு வாய்ப்புக் கொடுங்கன்னு சொல்லி இருக்காங்க. 


அதுவும் அப்ப நான் வாங்கின சம்பளத்தை விட நாலு மடங்கு அதிக சம்பளம் கொடுத்தாங்க. அந்த படத்தோட எல்லா பாட்டிலயும் அவ்வளவு ஈடுபாட்டுடன் இருந்தார். சொல்லப்போனால், ' சின்னத்தாமரை' பாடலுக்கு சுச்சிய வைக்கலாம்னு சொன்னதும் விஜய் சார் தான்." என்றார். 

இந்த பேட்டி வெளியாகிய பிறகு, ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விஜய் ஆண்டனியின் நன்றியுணர்வை பாராட்டி வருகின்றனர். 

Advertisement

Advertisement