தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது, தனது அரசியல் பயணத்தை அதிரடியாக ஆரம்பித்துள்ளார்
கடந்த ஓராண்டாகவே களப்பணியில் கவனம் செலுத்தி வந்த விஜய், அதற்காக மக்களை நேரில் சந்தித்து நிவாரணங்களையும், இளம் மாணவர்களை சந்தித்து கல்விக்கு ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகளையும் செய்து வந்தார்.
இறுதியில் நடிகர் விஜய் அரசியலில் வருவது உறுதியாக, அவரும் அவ்வாறே தனது கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் வைத்து அரசியலில் நுழைந்தார்.
எனினும் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல், 2026 ஆம் ஆண்டு நடக்கவுள்ள,சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுவோம் என்று விஜய் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து கட்சியின் உறுப்பினர் சேர்க்கை செயலி அறிவிப்பு, கொடி அறிவிப்பு, மாவட்ட நிர்வாகிகளுக்கு இடையே பொறுப்பு அறிவிப்பு என அனைத்தும் அடுத்தடுத்து இடம்பெறும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அடுத்த வாரம் அறிமுகம் ஆகவுள்ளதாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, சின்னம் மாநாட்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உறுப்பினர் சேர்க்கை ஆன்லைன் செயலி வீடியோ மூலம் வெளியிடப்பட்டது போல, கட்சிக் கொடியும் வீடியோ மூலம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!