• Jul 23 2025

மீனாவிடம் கையும் களவுமாக சிக்கிய ரோகிணி.! கிரிஷால் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம்.!

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, விஜயா மயக்கத்தில இருந்து எழும்பி அந்த ரதி எங்க போய்ட்டால் என்று பார்வதியை பார்த்துக் கேட்கிறார். அதுக்கு பார்வதி நான் அவங்க எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிட்டேன் என்கிறார். பின் விஜயா பார்வதி கிட்ட எனக்கு பயமா கிடக்கு என்று சொல்லுறார். அதைக் கேட்ட பார்வதி அண்டைக்கே மீனா சொன்னால் இவங்க பழகிறது சரியில்ல என்று நீ தான் கேட்கல என்கிறார்.


இதனை தொடர்ந்து விஜயா இது பெரிய பிரச்சனை ஆகிடுமோ என்று தோணுது என்கிறார். மேலும் கொஞ்ச நாளைக்கு டான்ஸ் classக்கு லீவு விட்டிறலாம் என்று சொல்லுறார். பின் பார்வதி அந்த பொண்ணு வீட்டில இருந்து யாரவது வந்தாங்கன்னா என்ன பண்ணுறது என்று கேட்கிறார். அதுக்கு விஜயா அவங்க வந்தால் எதுவும் தெரியாது என்று சொல்லுவம் என்கிறார். அதைத் தொடர்ந்து முத்துவும் மீனாவும் ரோகிணிட அம்மாவப் பார்க்க ஹாஸ்பிடலுக்குப் போகிறார்கள்.

அந்த நேரம் பார்த்து ரோகிணியும் அங்க வந்து நிக்கிறார். அப்ப முத்துவப் பார்த்த ரோகிணி தன்ர அம்மாவப் பார்க்காமல் வெளியிலேயே நிக்கிறார். இதனை அடுத்து முத்து ரோகிணி அம்மாவப் பார்த்து நீங்க ஹாஸ்பிடலில இருக்கிற விஷயத்தை உங்க மகளுக்கு சொன்னீங்களா என்று கேட்கிறார். அதைக் கேட்ட ரோகிணி அம்மா, இல்ல அவளுக்கு சொன்னால் கவலைப் படுவாள் என்கிறார்.  பின் முத்து ரோகிணி அம்மா கிட்ட நாங்களே கிரிஷை பாத்துக்கிறோம் என்று சொல்லுறார்.


 இதனை அடுத்து ரோகிணிட அம்மா ரோகிணியை பார்த்து முத்து குடும்பத்தை இவ்வளவு நாளாக ஏமாத்தினது போதும் இனிமேலாவது உண்மையை சொல்லு என்கிறார். அதுக்கு ரோகிணி நான் என்ன செய்யணும் என்று நீ சொல்லாத எனக்கு தெரியும் என்கிறார். பின் கிரிஷ் மனோஜ் ரூமுக்குள்ள போய் நிற்கிறதை பார்த்த ரோகிணி அவனுக்குப் போட்டு அடிக்கிறார். அதை பார்த்த மீனா சின்ன பையனை ஏன் அடிக்கிறீங்க என்று கேட்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement