தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் உறுதியான இடத்தை பிடித்து, சமூக சேவைகளிலும் முனைந்து செயல்பட்டு வரும் நடிகர் சூர்யா, இன்று (ஜூலை 23) தனது 50வது பிறந்த நாளை மிகவும் எளிமையாகவும், ஆனால் உணர்வுபூர்வமாகவும் கொண்டாடுகிறார்.
அவரது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
நேற்று இரவு, சூர்யா தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வீட்டிலேயே தனது பிறந்த நாளை கொண்டாடினார். அலங்கரிக்கப்பட்ட மேசையில் இருந்த கேக்கை மனைவி ஜோதிகாவுடன் சேர்ந்து வெட்டி மகிழ்ந்தார்.
கேக் வெட்டும் தருணத்தில் அனைத்து குடும்பத்தினரும் சிரிப்போடு இருக்கும் புகைப்படங்கள், ரசிகர்களின் இதயங்களை கவர்ந்துவிட்டன.
சூர்யாவின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!