பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா சுதாகரை பார்த்து என்னால என்ன செய்ய முடியும் என்றதை காட்டுறேன் என்கிறார். அதுக்கு சுதாகர் உங்க பொண்ணு ஏன் இப்புடி கத்திக் கொண்டிருக்கிறா என்று கோபியை பார்த்துக் கேட்கிறார். மேலும் சீக்கிரமாக நல்ல டாக்டர் கிட்ட கூட்டிக்கொண்டு போங்க என்கிறார். அதைக் கேட்ட கோபி நல்ல டாக்டர் கிட்ட கூட்டிக்கொண்டு போக வேண்டியது உங்க குடும்பத்தை தான் என்று சொல்லுறார்.
பின் கோபியும் இனியாவும் அங்கிருந்து கிளம்புறார். இதனை தொடர்ந்து கோபி பாக்கியாவுக்கு போன் எடுத்து இனியாவை சுதாகர் வீட்ட இருந்து கூட்டிக் கொண்டு வந்திட்டேன் என்கிறார். பின் பாக்கியா செல்விக்கு இனியாவை பற்றிச் சொல்லி அழுகிறார். மேலும் நிம்மதியாக சந்தோசமாக இருந்த என்ர பொண்ணோட வாழ்க்கையில என்ன நடக்குது என்றே தெரியல என்கிறார். அதைக் கேட்ட செல்வி நீ அழாத அக்கா எல்லாம் சரி ஆகிடும் என்கிறார்.
அதைத் தொடர்ந்து இனியா கோபியை பார்த்து நான் இப்புடியே கிடையாது என்ன அந்த குடும்பம் மாத்திட்டாங்க என்று சொல்லுறார். அதுக்கு கோபி அந்த குடும்பத்தோட தகுதி இதுதான் என்கிறார். மேலும் அவங்க என்ன சொன்னாலும் சொல்லிட்டு போகட்டும் நாங்க அமைதியாக இருப்போம் என்கிறார். பின் கோபி பாக்கியாட ஹோட்டலுக்கு போறார்.
இதனை அடுத்து கோபியும் பாக்கியாவும் ஹோட்டலில இனியாவை பற்றிக் கதைச்சுக் கொண்டிருக்கிறார்கள். பின் இனியா நிதீஷை பற்றி நியூஸ் போடுவோம் என்று officeல வேலை செய்யுற ஆட்களுக்குச் சொல்லுறார். மேலும் சுதாகர் குடும்பம் பற்றி எல்லாரும் கட்டாயம் தெரிஞ்சுக்கணும் என்கிறார். அதைத் தொடர்ந்து சுதாகர் மனைவி நிதீஷை கூப்பிட்டு இனியா நம்ம குடும்ப மானத்தை வாங்குறாள் என்கிறார். பின் இனியா நிதீஷ் பற்றிய எல்லா உண்மையையும் டீவியில சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!