• Oct 04 2024

என்ன ஆச்சு பாக்கியலட்சுமி நடிகைக்கு? மூச்சுவிட முடியாமல் அவஸ்தை..

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூச்சு விட முடியாமல் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விமான பணிப்பெண்ணாக இருந்த ரேஷ்மா பசுபுலேட்டி அதன் பிறகு சன் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் என்பதும் ’சுந்தரகாண்டம்’ என்ற தொடரில் நடிகையாக அறிமுகம் ஆகி அதன் பிறகு ’ஆண்டாள் அழகர்’ உட்பட பல சீரியல்கள் நடித்தார். மேலும் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ உள்ளிட்ட சில படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

தற்போது அவர் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கேரக்டரில் நடித்து வரும் நிலையில் இந்த சீரியல் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி யூடியூப் சேனல் ஒன்றில் அந்தரங்க நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் குறிப்பாக அவர் முத்தத்தில் எத்தனை வகைகள் இருக்கிறது என்பதை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் ரேஷ்மாவுக்கு ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமாக ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் சற்றுமுன் அவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்து விட்டு மூச்சிறைக்க சோர்வாக இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் முதலில் நன்றாக மூச்சு விட்டு கொள்ள வேண்டும் என்று அவர் பதிவு செய்துள்ளதை அடுத்து   இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து  வருகிறது.

Advertisement

Advertisement