• Jan 18 2025

தனது திருமண புகைப்படங்களை வெளியிட்ட ரம்யா பாண்டியன்! அள்ளும் லைக்ஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல திறமைகள் இருந்தும் நிலையான இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போராடிக் கொண்டிருக்கும் ஒரு சில நடிகைகளுள் முக்கியமானவர் தான் ரம்யா பாண்டியன். இவர் எடுத்த மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.

இவர் நடிப்பில் வெளியான ஜோக்கர் திரைப்படம் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் பின்பு வெளியான திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் காரணத்தினால் சின்னத்திரையில் களமிறங்கினார் நடிகை ரம்யா பாண்டியன்.

d_i_a

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் டைட்டிலை தவறவிட்டார். அதன் பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இதில் டைட்டிலை தவறவிட்ட போதிலும் பைனலில் ஒருவராக வந்தார். 

இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் மாடலிங்கிலும் கவனம் செலுத்தும் ரம்யா பாண்டியன் தன்னுடைய குடும்பத்துடன் கோவில்கள், வெளியூர் லொக்கேஷனுக்கு சென்று நேரம்  செலவழிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.


அதன்படி அவர் ரிஷிகேஷ் சென்றபோது அங்கு யோகா பயிற்சி  கொடுத்த லோவன் தவான் என்பவரோடு ஆரம்பத்தில் நட்புறவாக பழகினாலும் அது பின்பு காதலாக வளர்ந்துள்ளது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டினார்கள். 

இந்த நிலையில், இன்றைய தினம் திருமணம் செய்து கொண்ட ரம்யா பாண்டியன் தனது திருமண புகைப்படங்களை தற்போது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒரு சில படங்களை ஏற்கனவே வெளியாகி ட்ரெண்டான நிலையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement