• Jan 18 2025

தாமதமாயினும் சிறப்பு கொண்டாட்டம்..தீபாவளி புகைப்படங்கள் பகிர்ந்த மாளவிகா மோகனன்

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

முதன்முதலில் மலையாள படங்களில் தனது பயணத்தைத் தொடங்கிய மாளவிகா, பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிப்படங்களில் திறமையான நடிப்பின் மூலம் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.அவரது முக்கிய படங்களில் தனுஷுடன் இணைந்த மாறன், விஜய்யுடன் இணைந்த மாஸ்டர் மற்றும் ரஜினிகாந்துடன் இணைந்த பேட்ட ஆகியவை குறிப்பிடத்தக்கவை. தற்போது, அவர் பல்வேறு ப்ராஜெக்ட்களில் பிஸியாக இருக்கிறார், அதிலும் குறிப்பாக பல்வேறு பிரபலமான இயக்குனர்களுடன் பணியாற்றவுள்ளார்.


இந்நிலையில் அவர் தற்போது தீபாவளி காலத்தில் மிகவும் பிஸியாக இருந்ததால், ரசிகர்களுக்கு படங்களை உடனடியாக வெளியிட முடியாமல் சென்றுவிட்டதாக நடிகை தன் சமூக ஊடகங்களில் கூறியுள்ளார். தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு வாரம் கழித்து, தாமதமாக வந்தாலும் தீபாவளி சிறப்புப் படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் இதைப் பெரிதும் ரசித்து வருவதுடன், அவரின் உடை மற்றும் அணிகலன்கள் பற்றியும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement