• Dec 06 2024

ஜோதிகாவுடன் மீண்டும் இணைவது என் கனவு! கங்குவா ப்ரமோஷனில் பேசிய சூர்யா..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பத்து ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாக உள்ள கங்குவா படத்தில் சூர்யா, திஷா பதானி, மற்றும் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவா இயக்கத்தில் உருவான இப்படம் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறது, மேலும் ப்ரீ-புக்கிங் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சூர்யா, ஜோதிகாவுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார். "ஜோதிகாவுடன் மீண்டும் ஒரு படத்தில் சேர வேண்டும் என்பதே என் ஆசை, அது விரைவில் நனவாகும் என்று நம்புகிறேன்," என்று அவர் கூறியுள்ளார். அதேசமயம், "அப்படி நாங்கள் இணைந்து நடிக்கும் படம் தானாக அமைய வேண்டும்; எந்த இயக்குநரிடமும் நேரடியாக கதையை உருவாக்கச் சொல்ல மாட்டேன்" என்றார்.


சூர்யா மற்றும் ஜோதிகா முன்னர் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர், மற்றும் ரசிகர்கள் இதை மீண்டும் திரையில் காண ஆவலாக காத்திருக்கிறார்கள்.

Advertisement

Advertisement