• Jan 19 2025

மஞ்சுமல் போய்ஸ்க்கு நேரில் அழைத்து பாராட்டிய ரஜனி காந்த்.. வைரலாகும் புகைப்படங்கள்.

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தமிழில் வெளியாகும் திரைப்படங்கள் பழைய கதைகளையே திரும்ப திரும்ப அரைக்கிறார்கள் என்ற விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் புதிய கதைக்களங்களில் , புதிய முயற்சிகளில் உருவாகும் வேறுமொழி படங்கள் ஹிட் கொடுத்து வருகின்றன. 

அவ்வாறே சிறிய பொருட்செலவில் சிறிய நடிகர்களை வைத்து எடுக்கப்படும் மஞ்சுமல் பாய்ஸ் ,பிரேமலு போன்ற திரைப்படங்கள் தமிழ் நாட்டில் அதிக வசூல் செய்து வருகின்றது. அவ்வாறு சமீபத்தில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து வந்த மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் படக்குழுவினரை சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் பாராட்டி உள்ளார்.

சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகி இந்திய அளவில் சாதனை படைத்த த்ரில் திரைப்படம் "மஞ்சுமல் பாய்ஸ்" ஆகும். கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த "குணா" திரைப்படத்தில் காட்டப்பட்ட குகைக்குள் விழும் தங்களது  நண்பரை மற்றைய நண்பர்கள் எவ்வாறு காப்பாற்றுகின்றனர் என்பதை அடிப்படையாக கொண்டு இதன் கதை நகர்கின்றது. குறித்த திரைப்படம் தற்போது மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் காணப்படுகின்றது. 

குணா படத்தின் வசனங்கள் மற்றும் பாடல்கள் குறித்த படத்தில் நட்புக்காக பாடப்பட்டதை தொடர்ந்து தமிழ் நாட்டிழும் மஞ்சுமல் பாய்ஸ் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் குறித்த திரைப்படத்தை பார்த்து நெகிழ்ந்துபோன சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவினர் அனைவரையும் தனது வீட்டிற்கு நேரில் அழைத்து பாராட்டி அவர்களுடன் கலந்துரையாடி உள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement