• Apr 03 2025

’ரெளடி பேபி’ பாணியில் வேற லெவலில் ‘அமரன்’ பாடல்.. எஸ்கே-சாய்பல்லவி ஆட்டம்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ், சாய் பல்லவி நடித்தமாரிதிரைப்படத்தில்ரெளடி பேபிஎன்ற பாடல் இடம் பெற்றது என்பதும் இந்த பாடல் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் மிகப்பெரிய சாதனை செய்தது என்பது தெரிந்தது.

அந்த வகையில்ரெளடி பேபி பாணியில்அமரன்படத்தில் ஒரு பாடல் இடம் பெற்றுள்ளதாகவும் இந்த பாடலில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி செம ஆட்டம் போட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ளஅமரன்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு பாடல் படப்பிடிப்பு வரும் திங்கட்கிழமை முதல் தொடங்க இருப்பதாகவும் அதற்காக செட் அமைக்கும் பணி முடிவடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.



சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி கணவன் மனைவியாக இந்த படத்தில் நடித்திருக்கும் நிலையில் ஒரு கனவு பாடல் வருவதாகவும் அதில் செம டான்ஸ் இருவரும் ஆட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பாடலுக்கான நடன ஒத்திகையும் தற்போது நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாரிபடத்தில் இடம்பெற்றரெளடி பேபி' பாடலை அடுத்து ரசிகர்களுக்கு கவரும் வகையில் இந்த பாடல் இருக்கும் என்றும் இந்த பாடலில் வேற லெவலில் நடன இயக்கம் அமைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement