• Jan 16 2026

குட்டீஸ்களுடன் ஃபன்னாக ஆட்டம் போட்ட ஏஆர் ரஹ்மான்..! அமர்க்களமாகும் அயலானின் செம Vibe பாடல்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயனின் புதுத்திரைப்படமான அயலான் எதிர் வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகவுள்ளது. அந்த திரைப்படம் ரிலீசுக்கு முன்னரே பல பிரச்சனைகளில் சிக்கி இருந்தது. 

இந்நிலையில், ஏஆர் ரஹ்மானும் குட்டீஸ்களுடன் ஆட்டம் போட்டு அயலான் ஹைப்பை எகிற வைத்த வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.


அயலானின் மாஞ்சா நீ பாடல் சாண்டி மாஸ்டர் கோரியோகிராப் செய்துள்ளத்தோடு, குறித்த பாடல் வெஸ்ட்டர்ன் ஸ்டைலில் உருவாகியுள்ளது.


அதிலும் முக்கியமாக இப்பாடலில் சிவகார்த்திகேயனுடன் குட்டீஸ்கள் இணைந்து ஆடியுள்ளனர். அவர்களுடன் சர்ப்ரைஸ்ஸாக ஏஆர் ரஹ்மானும் செம்ம ஃபன்னாக டான்ஸ் ஆடி அமர்க்களப்படுத்தியுள்ளார். 


கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் காட்டிய மாமன்னன் படத்தில் இடம்பெற்ற 'ஜிகு ஜிகு ரயில்' பாடலில் ஏஆர் ரஹ்மான் டான்ஸ் ஆடி இருந்தார். அதன்பின்னர் இப்போது அயலான் படத்தில் ஆட்டம் போட்டுள்ளார் இசைப் புயல். 


Advertisement

Advertisement