• Jan 19 2025

ஹெல்மெட் இல்லை, நம்பர் பிளேட் இல்லை.. பைக்கில் சென்ற சரத்குமார்-ராதிகாவுக்கு சிக்கல்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகை ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவருக்கு ஆதரவாக சரத்குமாரும் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் சரத்குமார் பைக் ஓட்ட அவரது பின்னால் ராதிகா உட்கார்ந்து செல்லும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த பைக்கில் நம்பர் பிளேட்டும் இல்லை, ராதிகா மற்றும் சரத்குமார் ஆகிய இருவருமே ஹெல்மெட் போடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஒரு சில தொகுதிகளில் நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா பாஜக சார்பில் போட்டியிட, அவரை எதிர்த்து கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தேமுதிக சார்பில் போட்டியிடுகிறார். இருவருக்கும் கடும் போட்டி நிலவி வரும் நிலையில் நடிகை ராதிகா கடந்த சில நாட்களாக தனது கணவர் சரத்குமாருடன் இணைந்து தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று ராதிகா தனது கணவர் சரத்குமார் உடன் பைக்கில் அமர்ந்து சென்ற போது சிவகாசியில் உள்ள பல தெருக்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தாமரைக்கு ஓட்டு போடுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவருமே ஹெல்மெட் அணியாமல் சாலையில் பைக்கில் சென்றதாகவும் அவர்கள் சென்ற பைக்கில் நம்பர் பிளேட்டும் இல்லை என்றும் நெட்டிசன்கள் கண்டுபிடித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இது பெரும் சர்ச்சையை ஆகி உள்ள நிலையில் சாலை விதிகளை மீறியதாக இருவர் மீதும் வழக்கு பதிவு தொடரப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement