• Jan 19 2025

கழிவறை சிங் மீது மயங்கிக் கிடந்த பிரபல இளம் பாடகி மரணம்! வெளியான திடுக்கிடும் பின்னணி?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தென் கொரியாவை சேர்ந்த பிரபல பாடகி பார்க் போ ராம், தனது மயக்கும் இசையின் மூலம் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து உள்ளார். 

இவர்,  ‘XANADU எண்டர்டெயின்மெண்ட்’ என்ற இசை நிறுவனத்தையும் நடத்தி வந்துள்ளார். குறித்த நிறுவனம் இந்த ஆண்டு 10 வருடங்களை பூர்த்தி செய்யவுள்ளது.

இந்த நிலையில், தென் கொரிய பிரபல பாடகியான பார்க் போ ராம் தனது 30 வயதில் உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் அவரது ஒட்டுமொத்த ரசிகர்களையுமே நிலைகுலைய வைத்துள்ளது. இவரது இறப்புச் செய்தியை ‘XANADU எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனமும் உறுதிப்படுத்தி உள்ளது.


மேலும், இவர் இறப்பதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்பு தனியார் கூட்டத்தில் இருந்ததாகவும், அவர் அங்கு இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாகவும் போலீசார் தகவல் வழங்கியுள்ளனர்.

மேலும், அவர் அங்குள்ள கழிவறைக்கு சென்ற நிலையில், ரொம்ப  நேரம் கடந்தும் அவர் திரும்பவில்லை என்றதும் பதற்றமடைந்த அவரது தோழிகள் கழிவறைக்கு சென்று பார்த்தால் அவர் சிங் மீது சாய்ந்து சுயநலமின்றி கடந்துள்ளாராம்.

இதை தொடர்ந்து அவருக்கு முதலுதவி செய்த போதும் பலன் கிடைக்காததால்,  அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனாலும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

இவ்வாறு பிரபல பாடகியாக காணப்பட்ட பார்க் போ ராம் மரணத்திற்கு மது அருந்தியது தான் காரணமா? இல்லை வேறு ஏதாவது பிரச்சனையா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement