• Jan 19 2025

புஷ்பா 2 படத்தின் செகண்ட் சோங் ரிலீஸ்! குத்தாட்டம் போட வைத்த வீடியோ இதோ..

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி வசூலிலும் விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்ற படம் தான் புஷ்பா. இதன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சுகுமார் இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகின்றார்.

புஷ்பா இரண்டாவது பாகத்திலும்  ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், ஸ்ரீதேஜ், அனசுயா பரத்வாஜ், திவி வத்யா, ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றார்கள்.

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்ஸ் நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைத்து வருகின்றார். இந்த படம் எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.


இந்த நிலையில், தற்போது புஷ்பா படத்தின் இரண்டாவது பாடல் 'சூடானா' என்ற பாடல் தற்போது ரிலீசாகியுள்ளது. இந்த பாடல் தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையில் இசையமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலில் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா நடனமாடிய காட்சிகள் படு வைரலாகி  உள்ளது. அதேபோல பாடலில் வரிகளும் இசையும் ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது. எனவே முதலாவது பாடலை போலவே இரண்டாவது பாடலும் மிகப் பெரிய அளவில் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Advertisement

Advertisement