• Jan 18 2025

சாதனை எல்லாம் அல்வா சாப்பிடுற மாதிரி...! புஷ்பா-2 அடுத்த ரெக்கார்ட் பிரேக்...!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிக்கா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் புஷ்பா. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படமாகும்.  இதன் வெற்றியால் அடுத்து உருவாக்கப்பட்டு வந்தது புஷ்பா 2. இது தற்போது ரிலீசுக்காக காத்திருக்கிறது.  படம் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் இந்த திரைப்படம் பல சாதனைகள் புரிந்து வருகிறது. 


புஷ்பா 2வில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். புஷ்பா முதலாவது பாகத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு  நடிகை சமந்தா நடனம் ஆடி    எல்லோரையும் ஆடவைத்திருப்பார். புஷ்பா முதல் பாகம் வெற்றிக்கு அந்த பாடலும் சமந்தாவும் ஒரு காரணம் தான். 


அதேபோல புஷ்பா 2 படத்திலும் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரீ லீலா நடனமாடியுள்ளார். அல்லு அர்ஜுன் - ஸ்ரீ லீலா நடனத்தில் வெளியான 'கிஸ்ஸிக்' என்ற பாடல் இணையத்தில் படு வைரலாகியுள்ளதோடு ஒரு நாளில் 42 மில்லியங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இதுவரை எந்த லிரிக் பாடலும் பெறாத அளவிற்கு 50 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதுவே படத்திற்கு மிகப்பெரிய வெற்றிதான். 


Advertisement

Advertisement