• Jan 18 2025

அடுத்தது லண்டன் மருமகளா..?திருமணத்தை உறுதிப்படுத்திய நாகர்ஜூனா குடும்பம்

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

சமீபத்தில், நாகார்ஜூனா குடும்பம் மகன் நாக சைதன்யா மற்றும் சோபிதா துளிபாலா இருவருக்கும் நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த ஜோடியின் திருமணம் வரும் டிசம்பர் 4ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடைபெற உள்ளது.


இந்த விழாவில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொள்ள உள்ளனர்.மேலும், நாகார்ஜூனா மற்றும் அமலா ஜோடியின் இளைய மகனான அகில் அக்கினேனியின் திருமணமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அகில், லண்டனை சேர்ந்த Zainab Ravdjee என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார்.

நாகார்ஜூனாவின் இல்லத்தில் இன்று காலை இரண்டு குடும்பத்தினரின் முன்னிலையில் அகில் மற்றும் சைனப்பின் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. இவர்கள் திருமணம் அடுத்த வருடம் நடக்கவுள்ளதாக நாகர்ஜுனா தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement