• Jan 18 2025

கோபியை வீட்டைவிட்டு துரத்தியடித்த ராதிகா.. எதிர்பாராத திருப்பத்தில் பாக்கியலட்சுமி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், இனியா கோபியுடன் மனம் விட்டு பேசுகின்றார். அதன் பின்பு லேட் ஆகிவிட்டது என்று வீட்டுக்கு கிளம்பிச் செல்ல, அங்கு வாசலில் பாக்கியா காத்துக் கொண்டிருக்கிறார். இதன் போது கோபி பாக்கியாவை அழைத்து நம்ம பிள்ளையை பார்த்துக் கொள்ளு  என்று சொல்லிச் செல்கிறார்.

இதை தொடர்ந்து வீட்டுக்கு சென்ற கோபியுடன் மையூ, உங்களுக்காக தான் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கின்றேன் என்று சொல்ல, நேரமாயிற்று நீ போய் தூங்கு என்று கோபி சொல்லுகிறார்.

இதனால் கமலா உங்க அப்பாக்கு உன்ன விட நிறைய விஷயம் இருக்குது என்று சொல்லுகின்றார். மேலும் ராதிகாவும் உங்க பொண்ணு இப்படி எனக்கு கதைச்சுட்டு போனா.. அத பத்தி ஒரு ஆறுதல் கூட சொல்லல என்று சண்டை போட, என்னால இப்போதைக்கு கதைக்கிற அளவுக்கு தெம்பு இல்லை என்று சொல்லுகின்றார் கோபி.

ஆனாலும் ராதிகா அப்ப எதுக்கு என்ன கல்யாணம் பண்ணிங்க என கேட்க, இன்டைக்கு இனியா மனம் விட்டு பேசினா.. நான் அவங்கள சந்தோஷமா வச்சுக்கிட்டன் என்று நினைச்சேன்.. ஆனா எவ்வளவோ ஹெட் பண்ணி இருக்கேன். நான் அவங்க கூட இருக்கும்போது தான் சந்தோஷமா இருந்தேன் என்று இனியா சொன்னது உண்மைதான்.


உன்ன கல்யாணம் பண்ணினதுல இருந்து எல்லாம் நாசமா போச்சு.. என் பிசினஸ் போச்சு.. என் சந்தோசம் போச்சு அப்படி என்று ராதிகாவுக்கு பதில் அடி கொடுக்கிறார்.. ராதிகாவும் நானும் உங்களை கல்யாணம் பண்ணி அவமானப்பட்டேன் என்று சொல்ல, இறுதியில் உங்களை யாரும் இழுத்து பிடிக்கவில்லை நீங்கள் வீட்டை வெளியே போகலாம் என்று கோபிக்கு ராதிகா சொல்லுகின்றார்.

இதனால் கோபப்பட்டு கோபி நான் ஒரேடியாக வீட்டை விட்டு போகிறேன் என்று வெளியே கிளம்பிச் செல்கின்றார். மறுபக்கம் இனியா தான் அப்பாவிடம் கதைத்ததை பற்றி பாக்கியாவிடம் சொல்லுகின்றார். மேலும் பாக்கியா ராதிகா வீட்டு போய் இனி சண்டை போட வேண்டாம் என்று இனியாவுக்கு சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட். 

Advertisement

Advertisement