• Mar 29 2025

என்னது பிக்பாஸ் வீட்டுக்குள்ளயும் புயலா..! கறுப்பு கோட்டுடன் வந்த விஜய் சேதுபதி..

Mathumitha / 3 months ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 8, 50 நாட்களை கடந்துவிட்டதைக் கண்டு ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், இந்த சீசன் மிகுந்த உற்சாகத்துடன் இல்லாமல், ஒரு சலிப்பை உருவாக்கியதாகவே கருத்து நிலவுகிறது.ஏனெனில் முதல் சில வாரங்கள் ரசிகர்களுக்கு எதிர்பார்த்த தரத்தில் இல்லை என்பதே பெரும்பான்மையானோரின் கருத்து.

போட்டியாளர்கள் மத்தியில் உள்ள போட்டிப் போக்கு குறைவாக இருந்து, பலரும் தங்களை "நல்லவர்களாக" மக்கள் முன் காட்டுவதற்கே முயற்சித்ததாக ரசிகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இருப்பினும், பிக் பாஸ் சீசன் 8 மற்ற சீசன்களுடன் ஒப்பிடுகையில், இன்னும் பெரிய திருப்பங்களை கொண்டிருக்கலாம் இதனால், அடுத்த வரும் நாட்களில் நிகழ்ச்சி வெற்றிகரமாக புதிய பாதையில் செல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது குறித்த ப்ரோமோவில் கெத்தாக வந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி "நடுவில இருக்கிற கோடு எடுத்தவுடனே வீட்டுக்குள்ள புயலே அடிக்க ஆரம்பிச்சிருச்சு,எல்லாருக்கும் உள்ளுக்குள்ள அடக்கி வச்சிருந்த ஆத்திரம் எல்லாம் பிச்சுக்கிட்டு வெளிய வந்திருச்சு,பொம்மைய  குடுத்து விளையாடுங்க எண்டு விட போர்க்களம் ஆக்கி வச்சிருக்கானுங்க" என மிகவும் ஆவேசமாக கூறினார்.

Advertisement

Advertisement