• Jan 22 2026

இறுதி நிமிடத்தில் நடந்த ட்விஸ்ட்.. எலிமினேட் ஆனது யாரு தெரியுமா? கனி சேஃப்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக ஆதிரை உள்ளே நுழைந்ததும் மீண்டும் ஆட்டம்  சூடு பிடித்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தது போலவே சண்டையும் சச்சரவுமாக போட்டியாளர்கள் காணப்படுகின்றார்கள். 

பிக் பாஸ் வீட்டிற்குள் ஆதிரை வந்ததுமே சண்டைகளை மூட்டி விட ஆரம்பித்துள்ளார் . இதனிடையே கமருதீன், பார்வதி, அரோரா இடையே மோதல்கள் வெடித்து வருகின்றன. ஆதிரைக்கு பதிலாக பிரவீன் ராஜ் அல்லது திவாகர் வந்திருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களுக்குள் மட்டும் இல்லாமல் பிக் பாஸையே வெறுப்பேற்றி வருகின்றனர்.  இதனால் ஒரு கட்டத்தில்  பிக் பாஸ்  கடும் ஆத்திரம் அடைந்து போட்டியாளர்களை  எச்சரித்திருந்தார். 


இந்த நிலையில், இந்த வாரம் பிரஜின் எலிமினேட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  ஏற்கனவே கனி எலிமினேட் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இன்று வெளியான ப்ரோமோவில் அவர் சேவ் ஆகியுள்ளார்.   



Advertisement

Advertisement