விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடைபெற இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.
இன்றைய எபிசோட்டில் மயூ "எனக்கு இது மாதிரி எல்லாரும் ஒண்ணா இருக்க தான் புடிச்சிருக்கு ஆண்ட்டி எல்லாரும் சண்டை போடுறாங்க ஆனா எனக்கு சண்டை போடுறது பிடிக்காது" என்று சொல்ல பாக்கியா அவருக்கு சமாதானம் படுத்தி தூங்க வைக்கிறார். அந்த நேரம் பார்த்து பெட்ஷீட் போட்டுக் கொண்டு இனியா ரூமுக்குள் வர மயூ திருடன் என நினைக்க உடனே இனியா லைட்டை போடுகிறார்.
பாக்கியா என்னாச்சு என்று கேட்க "அங்கு சரியா ஏசி ஓடல ஃபேன் ஓடல என்று சொல்லி இங்கே தூங்கப் போகிறேன். என்று சொல்லி பாக்யாவின் பக்கத்தில் படுக்கிறார். ஒரு பக்கத்தில் மயூவும் மறுபக்கத்தில் இனியாவும் பாக்கியாவை கட்டிப்பிடித்து தூங்குகின்றனர்.
மறுபக்கம் ராதிகா மயூவை போய் கூட்டிட்டு வாரேன் என்று சொல்ல அதுல ஒன்னும் வேண்டாம் இன்னைக்கு பாக்கியாவுடன் மயூ படுக்குறேனு சொல்லவும் கூட்டிட்டு போயிட்டாங்க என்று சொல்கிறார் கோபி. அவங்களுக்கு எதுக்கு சிரமம் என்று ராதிகா கேட்க சிரமமான இது பாக்கியா எடுத்த முடிவுதான் என்று சொல்லுகிறார். நான் ஒரு எச்சாரா வேலை பார்த்துகிட்டு இருக்க ஒருத்தவங்கள பார்க்கும்போது அவங்க மனசுல என்ன நினைக்கிறாங்க என்பதை நான் தெரிஞ்சுப்பேன் ஆனா ஒரே ஒருத்தர் மட்டும் என்னால புரிஞ்சுக்கவே முடியலன்னா அது பாக்கியம் தான் என்று சொல்கிறார்.
காலையில் பாக்கியா மற்றும் ராதிகா ஒற்றுமையாக சமைப்பதை பார்த்து ஈஸ்வரி கோபபடுகிறார். அவளை எதுக்கு சமையல் அறைக்கு விட்ட என்று கேட்கிறார். வாடகை கொடுத்துட்டு இருக்கேனு சொன்னாங்க அதான் விட்டேன் என்று சொல்லி ஈஸ்வரி வாயை அடைகிறார். பாக்கியா இப்ப ரொம்ப வாய்பேசுரா என்று கோபியிடம் சொல்கிறார் கோபி இதை கேட்டு சிரிக்கிறார். சாப்பிடும் போதும் ஒன்றாக இருந்து சாப்பிடுகிறார்கள் அத்தோடு எபிசோட் முடிவடைகிறது.
Listen News!