• Jan 05 2025

மாட்டிக்கொண்டு முழிக்கும் ரோகிணி! அண்ணாமலையால் மனம் மாறும் விஜயா!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். 


விஜயாவிடம் அண்ணாமலை "ரெண்டு பேரும்தான் தப்பு பண்ணி இருக்காங்க அதுக்காக நீ ரோகினிக்கு மட்டும் தண்டனை கொடுக்கிறது சரியா. உன்னோட பையன் கூட தான் உன்கிட்ட இருந்து உண்மையை மறைச்சா நீ ஏன் அவனை எதுவுமே சொல்லல" என்று கேட்கிறார். அதற்கு விஜயா "அந்த ரோகிணி தான் சொல்ல வேணாம் என்று சொல்லி இருப்பா" என்று செல்கிறார். அதற்கு அண்ணாமலை "மனோஜ்காக தானே செஞ்சா விடு இது காரணமா வச்சு நீ அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சி வச்சு இருக்கிறதுல்ல என்ன நியாயம் இருக்கு முதலில் அவர்களை சேர்த்து வை" என்று சொல்கிறார்.


மறுபக்கம் ரோகினி வித்யா வீட்டில் உட்கார்ந்து அழுது கொண்டே இருக்கிறார் வித்யா அவருக்கு ஆறுதல் சொல்ல நான் "இவ்வளவு கோபப்படுவார்கள் என்று நினைக்கல பார்லர் விஷயம் தெரிஞ்சு திட்டின மாதிரி திட்டுவாங்கன்னு தான் நினைச்சேன் இதுக்கெல்லாம் காரணம் முத்து தான் ஏதாவது ஒரு விஷயத்துல மாட்டி விடணும்னு நினைச்சு பண்ணிட்டான்" என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மனோஜிடம் இருந்து கால் வருகிறது. ஆனால் ரோகிணி அதனை எடுக்கவில்லை. வித்யாவையும் போன் எடுக்க கூடாது என்று சொல்லிவிடுகிறார்.


மறுபடியும் வித்யாவிற்கு கால் பண்ணி ரோகிணியை அம்மா வீட்டுக்கு வர சொன்னாதாக சொல்கிறார். என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார். ரோகினையும் வேறு வழியில்லாமல் வீட்டிற்கு வருகிறார். வீட்டில் அண்ணாமை "ஏதும் பிரச்சினைனா குடும்பத்தோட பேசுங்க கலந்து பேசினால் தான் பிரச்சினை தீரும் இந்த பொய், பித்தலாட்டம் எல்லாம் வேணா என்று மனோஜ் மற்றும் ரோகிணிக்கு சொல்கிறார். அண்ணாமலை சொல்வதை கேட்டு ரோகிணி திருத்திரு என்று முழிக்கிறார். அத்தோடு இன்றைய நாள் எபிசோட் முடிவடைகிறது.   

Advertisement

Advertisement