தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர்தான் சினேகன். இவர் சுமார் 70ற்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். மேலும் ஒரு நடிகராக உயர்திரு 420, கோமாளி, ஆனந்தம் விளையாடும் வீடு, தாண்டி யோகி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட சினேகன், அவ்வப்போது ஒரு சில சர்ச்சைகளிலும் சிக்கி இருந்தார். ஆனாலும் வெற்றிகரமாக அந்த நிகழ்ச்சியில் விளையாடிய பைனல் லிஸ்டில் ஒருவராக மாறினார். எனினும் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் பெரிதாக கிடைக்கவில்லை.
இவர் கடந்த 2021ம் ஆண்டு சீரியல் நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்தார். இவர்கள் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாகவும் பேட்டிகளில் தெரிவித்து இருந்தார்கள். அத்துடன் வயது வித்தியாசம் இன்றி காதலித்த இவர்கள், பலரும் பொறாமைப்படும் அளவிற்கு தற்போது வரையில் காதலுக்கு உன்னதமாக வாழ்ந்து வருகின்றார்கள்.
சமீபத்தில் தனது மனைவி கன்னிகா கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சினேகன், அதன் பின்பு தங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த தகவலையும் புகைப்படத்துடன் வெளியிட்டு அறிவித்திருந்தார். இவர்களுக்கு பிரபலங்கள் தொடக்கம் ரசிகர்கள் வரை பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், தனது மனைவி கன்னிகாவை வைத்தியசாலையில் அனுமதித்தது முதல் அவருக்கு பிறந்த குழந்தைகளை கையில் ஏந்தியது வரை எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
அதில் கன்னிகா லேபர் வோர்ட்டுக்கு செல்லும் போதும் சந்தோஷத்துடன் செல்லுகின்றார். தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!