• Mar 17 2025

காசு இருக்கிறவ எல்லாம் படம் எடுக்கலாமா? விஷால் ஓபன் டாக்

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல தென்னிந்திய நடிகரான விஷால் நடிப்பதற்கு முன்னர் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். பின்னரே நடிகனாக மக்கள் மனதைக் கவர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  அத்துடன்  விஷால் பிறந்தது தெலுங்கு நாடு என்றாலும் அவர் பிரபல்யம் அடைந்தது தமிழ் நாட்டு மக்களாலேயே என்பதும் குறிப்பிடத்தக்கது.


சமீபத்தில் விஷால் நேர்கானல் ஒன்றில் கொடுத்த பேட்டி வைரலாகி வருகின்றது. அதில் " இயக்குநர்களை தயவு செய்து ஒரு கோடியில் இருந்து நாலு கோடி வரை பணம் செலவழித்து படம் எடுக்க வேண்டாம் என்று கூறியதுடன் அப்படி எடுக்கிறதை விட அந்த பணத்தை உங்கள் குழந்தைகளின் பெயரில் வங்கியில் போடவும் இல்லாவிட்டால் உங்களுக்கு என்று சொந்தமா நிலத்தை வாங்குங்க " என்றார்.

மேலும் இப்ப திரையுலகு ரொம்ப மோசமான நிலையில் உள்ளது. வேறயாரும்  இப்படி சொல்லமாட்டாங்க நான் ஓப்பனா சொல்லுறன் என்றதுடன் காசு இருக்கிறவ எல்லாம் படம் எடுக்குறது ஏன்டா அம்பானி மற்றும் விஜய் மல்லையா போன்றவர்களும் படத்தை எடுத்திருக்கலாம் என்றார்.

அத்துடன் அவர்களுக்கு தெரியும்  திரையுலகில் உறுதியாக பணம் கிடைக்காது என்று அதனால் தான் அவர்கள் படம் எடுப்பதை விரும்பவில்லை என்றார்.இந்த வீடியோ மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement