• Mar 17 2025

விஜய் சும்மா கூப்பிட்டாலே போய்டுவன்;கமலுக்கும் VJS_க்கும் இதுதான் டிபரண்ட்! தர்ஷா குப்தா

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் எட்டில் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் தர்ஷா குப்தாவும் ஒருவராக காணப்படுகின்றார். இவர் நேற்றைய தினம் அமாவாசை தினத்தை முன்னிட்டு பிரத்யங்கிரா தேவி ஆலயத்தில்  உலக நன்மை விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற தியாகத்தில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில், ஆலய வழிபாடுகளில் ஈடுபட்ட பின்பு வெளியே வந்த தர்ஷா குப்தா வழங்கிய பேட்டி வைரலாகி வருகின்றது. அதில் அவர் பிக்பாஸ் பற்றியும் தனது ஆன்மீகப் பயணம் பற்றியும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் தளபதி விஜய் பற்றியும் தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஜாலியாகத்தான் இருந்தது. பலரும் சொல்லுவாங்க உள்ள போனாட்ரெஸ்டா தான் இருக்கும் என்று.. ஆனால் எனக்கு அப்படி இல்லை. நான் இருக்க மட்டும் ரொம்ப சந்தோஷமாக நிம்மதியாக தான் இருந்தேன்..


பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமலஹாசனுக்கும் விஜய் சேதுபதிக்கும் என்ன வித்தியாசம் என்றால், கமலஹாசன் பல புத்தகங்களை படித்து அதற்கு ஏற்ற வகையிலே போட்டியாளர்களை நெறிப்படுத்தி வந்தார். 

ஆனால் விஜய் சேதுபதியின் இந்த சீசன் மொத்தமாகவே ஜாலியாகவும் கலகலப்பாகவும் இருந்தது.  விஜய் சேதுபதி யதார்த்தமாக நிகழ்ச்சியை கொண்டு சென்றதோடு அதனை  பார்க்கிற மக்கள் எல்லாருக்குமே ரொம்ப என்டர்டெயின்மெண்டா  இருந்துச்சு.


மேலும் தளபதி சார் பற்றி சொல்லவே வேண்டாம்.. அவர் சும்மா போய் நின்றாலே அவருக்கு பின்னால் கூட்டம் கூடும். அவருக்கு மக்கள், ரசிகர்கள் நிறைய சப்போர்ட் பண்ணுறாங்க. அதனால அவர் சிஎம்மா வருவார் என்று நானும் எதிர்பார்க்கின்றேன். 

அத்துடன் தளபதி விஜய் கூப்பிட்டால் நான் கண்டிப்பா போவேன். அவர் சும்மா கூப்பிட்டாலே போதும் நான் கிளம்பி போயிடுவேன் என்று தர்ஷா குப்தா கலகலப்பாக பேட்டி கொடுத்துள்ளார்.

Advertisement

Advertisement