பிரபல நடிகை கீர்த்தி சுரேசுக்கு சமீபத்தில் தனது நீண்ட நாள் நண்பர் ஆண்டனி தட்டிலுடன் திருமணம் நடைபெற்றது. இவரின் திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வந்து வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தனது கணவர் ஆண்டனி தட்டிலுடன் ஹனிமூன் சென்றுள்ள அழகிய புகைப்படங்களை கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
கீர்த்தியின் கல்யாணம் கோவாவில் மிக பிரம்மாண்டமான முறையில் இந்து முறை படியும், கிருஸ்தவ முறை படியும் நடந்தது. இந்த திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள்,நண்பர்கள், பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த போட்டோக்கள் அனைத்தும் இணையத்தில் வைரலானது. இந்த அழகிய காதல் ஜோடிக்கு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
கல்யாணம் முடிந்த கையோடு நடிகை கீர்த்தி தான் நடித்த பேபி ஜான் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளுக்கு கழுத்தில் மஞ்சள் தாலியுடன் கிளாமர் உடையில் கலந்துகொண்டார். அத்தோடு கிருஸ்துமஸ் நிகழ்வில் கூட பேபி ஜான் திரைப்பட ஹீரோவுடன் சுருக்கிறார் என்று ட்ரோல்களுக்கு உள்ளானார்.
இந்நிலையில் தனது காதல் கணவருடன் தற்போது கீர்த்தி ஹனிமூன் சென்றுள்ளார். பீச்,போட் ரைடிங், வித்தியாசமான உணவுகள், பைக் ட்ரவலிங் என இருவரும் ஹாப்பியாக என்ஜோய் பண்ணும் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். இதுவரையில் தனியாக புகைப்படங்கள் பதிவிட்டு வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது கமிட்டட் ஆகி ஜோடியாக புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
Listen News!