• Jan 19 2025

’தளபதி 69’ படத்தில் ஹீரோயின் இல்லை.. ஆனாலும் ட்விஸ்ட் வைத்த எச் வினோத்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 69’ திரைப்படத்தில் ஹீரோயின் இல்லை என்றும் முழுக்க முழுக்க இது ஒரு சேஸிங் ஆக்சன் படம் என்றும் ஆனால் அதே நேரத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை ஒருவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவார் என்றும் எச் வினோத் தரப்பிலிருந்து செய்திகள் கசிந்துள்ளது. 

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது திரைப்படத்தை எச் வினோத் இயக்க இருக்கிறார் என்பதும் பிரபல தெலுங்கு திரைப்பட நிர்வாணம் ஆன டிவிவி என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 

இந்த நிலையில் இந்த படத்தின் கதைப்படி நாயகி கேரக்டர் இல்லை என்றும் முழுக்க முழுக்க இது ஒரு சேசிங் ஆக்சன் படம் என்றும் இடைவேளைக்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் மாறி மாறி சேசிங் காட்சி தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. விறுவிறுப்பான திரைக்கதை என்பதால் இந்த படத்தில் நாயகி வேண்டாம் என்று எச் வினோத் முடிவு செய்திருப்பதாகவும் அதனை விஜய்யும் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிகிறது. 



ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் ஒரு  குத்து பாடல் இருப்பதாகவும் அதில் நடனமாட தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. நாயகி இல்லை என்றாலும் இந்த படத்தில் முக்கிய நடிகைகள் சிலர் ஆக்சன் கேரக்டரில் நடிப்பார்கள் என்றும் அது மட்டும் இன்றி இதுவும் ஒரு மல்டிஸ்டார் படமாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மொத்தத்தில் ’தளபதி 69 ’ படம் குறித்து வெளியாகி கொண்டிருக்கும் தகவல் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement