ஹாலிவுட் திரைப்பட உலகத்தில் ரசிகர்களை கவர்ந்தெடுத்த மற்றும் உலகம் முழுவதும் வசூலை குவித்த திரைப்படமாக “Avatar” இடம் பெற்றது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதன் இரண்டாம் பாகமான "Avatar: The Way of Water" கடந்த வருடம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வருமான ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.
அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தற்போது உருவாக்கியுள்ள மூன்றாவது பாகம் "Avatar: Fire and Ash" என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் வரும் 2025ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
"Avatar 3: Fire and Ash" திரைப்படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில், கடந்த இரு பாகங்களை விட கூடுதலான VFX காட்சிகள் மற்றும் பின்னணி தொழிநுட்ப காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
Listen News!