மலையாள திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வகையில், புகழ்பெற்ற நடிகர்கள் துல்கர் சல்மான், மம்முட்டி, மற்றும் பிரித்விராஜ் ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையை சமீபத்தில் மேற்கொண்டிருந்தனர். இந்த நடவடிக்கை, பூட்டான் வழியாக இந்தியாவுக்குள் கார்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுவதாக உள்ள சந்தேகத்தின் அடிப்படையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகவே மலையாள திரையுலகத்தை சேர்ந்த பிரபலங்கள் மீது சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோதனை நடவடிக்கையின் போது, நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் இருந்த இரண்டு உயர்தர கார்கள் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கார்கள் பூட்டான் வழியாக சுங்க வரி செலுத்தாமல் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதா? என்ற சந்தேகத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், துல்கர் சல்மான் தற்பொழுது தன் மீது உள்ள புகார்கள் அடிப்படையற்றவை என்றும், அந்த இரண்டு கார்கள் மீதான பறிமுதல் நடவடிக்கையை எதிர்த்து அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த தகவல்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.
Listen News!