• Sep 28 2025

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற சபாநாயகர் இருக்கையில் அமர்த்தப்பட்ட தேவா.! எதற்காக தெரியுமா.?

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசையின் அழகையும், இனிமையையும் உலகிற்கு அறிமுகப்படுத்திய பிரபல இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா, தற்போது அவரது இசைப் பயணத்தின் ஒரு முக்கியமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை அனுபவித்துள்ளார். சமீபத்தில் அவர் ஆஸ்திரேலியாவிற்குச் சென்றபோது, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.


ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள நாடாளுமன்ற வளாகத்தில், இசை அமைப்பாளர் தேவா அவர்களை மிகவும் உயர்ந்த மரியாதையுடன் வரவேற்று, நாடாளுமன்ற சபாநாயகர் இருக்கையில் அமர்த்தி, மரபு மிக்க செங்கோல் வழங்கி கெளரவித்தனர்.


இந்த நிகழ்வானது, தமிழ் கலாச்சாரத்துக்கும், உலகளாவிய தமிழர்களுக்கும் ஒரு பெருமைக்குரிய தருணமாக விளங்கியுள்ளது. தேவா அவர்கள் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருப்பது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement