• Sep 14 2024

நெப்போலியன் மருமகளின் முதல் வீடியோ.. பிரமாண்டமான நிச்சயதார்த்தம்

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் விரைவில் நடைபெற இருப்பதாகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் தான் அவரை திருமணம் செய்ய போவதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.

நெப்போலியன் மகன் நீண்ட தூரம் விமான பயணம் செய்ய முடியாது என்பதால் அவரை தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கான சிறப்பு கப்பல் ஏற்பாடு செய்ததாகவும் அந்த ஏற்பாடு செய்ய முடியவில்லை என்றால் ஜப்பானில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்ய இருப்பதாகவும் கூட செய்திகள் வெளியானது.



இந்த நிலையில் நெப்போலியன் மகன் தனுஷ் மற்றும் அக்சயா திருமண நிச்சயதார்த்தம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த நிச்சயதார்த்தத்தின் போது எடுத்த புகைப்படங்களை நெப்போலியன் பார்ப்பது போன்ற காட்சிகள் மற்றும் கடல் கடந்து இருந்தாலும் தனது மகனுக்கு தமிழ்நாட்டு பெண் தான் வேண்டும் என்று முடிவு செய்து தமிழ்நாட்டிலிருந்து ஒரு பெண்ணை எடுத்து இருக்கிறோம் என்று நெப்போலியன் பேசும் காட்சியும் உள்ளது.

மேலும் நெப்போலியன் மகன் தனுஷை திருமணம் செய்ய போகும் அக்சயா என்ற பெண்ணும் அந்த வீடியோவில் சிரித்தபடி இருக்கும் காட்சியும் உள்ளது. முதல் முதலாக நெப்போலியன் மருமகள் வீடியோவில் இருந்ததை அடுத்து அந்த பெண்ணுக்கும் வருங்கால தம்பதிக்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement