• Jan 19 2025

விவாகரத்து ஆன வருத்தமே இல்லையே.. குழந்தையுடன் ஜாலியாக பிக்னிக் சென்ற நடிகை..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவை விவாகரத்து செய்ய போவதாக அறிவித்த நடிகை நடாஷா அது குறித்த எந்த கவலையும் இல்லாமல் தனது குழந்தையுடன் பிக்னிக் சென்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் நடாஷா தம்பதிகள் விவாகரத்து பெற போவதாக தனித்தனியாக அறிக்கை வெளியிட்டதை அடுத்து சமூக வலைதள பக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு அகஸ்தியா என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் 4 ஆண்டுகளில் இந்த திருமணம் முடிவுக்கு வருவதை அடுத்து ரசிகர்கள் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

ஏற்கனவே இருவருக்கும் இடையே பிரச்சனை என்றும் அம்பானி வீட்டு திருமணத்திற்கு கூட ஹர்திக் பாண்ட்யா தனியாகத்தான் சென்றதையும் பார்த்த ரசிகர்கள் விரைவில் பிரியும் அறிவிப்பை வெளியொடுவார்கள் என்று எதிர்பார்த்தது போலவே சில நாட்களுக்கு முன்பு பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்த நிலையில் கணவனை பிரிந்து விட்டோம் என்ற எந்தவித வருத்தமும் இல்லாமல் நடிகை நடாஷா தனது மகனுடன் பிக்னிக் சென்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கு பலரும் சர்ச்சைக்குரிய கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

கணவனை பிரிந்தாலும் நடாஷா வாழ்க்கையில் ஜாலியாக தான் இருக்கிறார் என்றும் கணவனை பிரிந்த வருத்தம் எதுவுமே அவரது முகத்தில் தெரியவில்லை என்றும் பதிவாகி வருகிறது. ஆனால் அதே நேரத்தில் தன்னுடைய கணவனை பிரிந்த கஷ்டம் இருந்தாலும் குழந்தைக்காக அவர் ஜாலியாக நேரத்தை செலவிடுவதை பாசிட்டிவ்வாகவும் பலர் கமெண்ட்ஸ் களை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement