• Feb 04 2025

நயன்தாராவிற்கு இரட்டை பெண் குழந்தைகளா..? மகிழ்ச்சியுடன் விக்கினேஷ் சிவன் பதிவு..!

Mathumitha / 3 hours ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் ஹிந்தி சினிமாவில் ஷாருக்கான் ஜோடியாக  'ஜவான்' படத்தில் நடித்து அப் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.


இந்த நிலையில் தற்போது இவர் நடிப்பில்  'Dear Students', 'Toxic', 'Rakkayie', 'விஷ்ணு வர்தன்' என பல படங்கள் வெளியாகவுள்ளன தொழிலில் மட்டுமல்லாமல் நயன்தாரா தனது குடும்பத்தையும் அதிக கவனமாக பராமரிக்கிறார். நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து இரண்டு adorable ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்.


தனது குடும்பத்தின் ஸ்பெஷல் தருணங்களை சிறப்பாக கொண்டாடும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்  தங்களது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.


இந்நிலையில் அப்படி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் AI தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது கையில் 2 பெண் குழந்தைகளை வைத்திருப்பது போல் உருவாக்கிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.இதனை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் " some time ai is just tooo " என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement