• Jan 19 2025

60வது பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடிய நெப்போலியன்! பங்கேற்ற பிரபலங்கள் யார் யார் தெரியுமா? போட்டோ ஆல்பம் இதோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் நெப்போலியன், தனது பிறந்த நாளை திருவிழா போல கொண்டாடியுள்ளார். தற்போது அவரது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அதன்படி, நடிகர் நெப்போலியனின் 60 ஆவது பிறந்த நாள், தமிழ் சினிமா பிரபங்கள் மத்தியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. 


டிசம்பர் 2 ஆம் திகதி நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் தமிழ் சினிமா நட்சத்திரங்களான நடிகை குஷ்பு மற்றும் மீனாவும் பங்கேற்று உள்ளனர்.

நெப்போலியனுக்கு, குணால் மற்றும் தனுஷ் என 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் தனுஷ் என்ற மகனுக்கு அரியவகை நோயின் பாதிப்பு ஏற்பட்டுஇ நடக்க முடியாத நிலையில் காணப்படுகிறார்.


எனினும், மகனின் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்று வந்த  நெப்போலியன், பின்பு குடும்பத்துடன் அங்கையே செட்டிலாகிவிட்டார். 

இந்நிலையில், நெப்போலியன் தனது 60 ஆவது பிறந்த நாளை கடந்த 2 ஆம் திகதி விமர்சையாக கொண்டாடியுள்ளார். 

தனது பிறந்த நாள் கொண்டாடத்திற்காக தமிழ் சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.


அதில், நடிகர் ஆதி, சத்யராஜ் ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பிரபல யூடியூபர் இர்பான் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நேரடியாக பங்கேற்று வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

தற்போது நெப்போலியனின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement