• Apr 15 2026

டிமான்ட்டி காலனி 2யின் ட்ரெயிலர் ரெடி.. பல சர்ப்பிரைஸ்களும் திருப்பங்களும் உண்டாம்! அதீத எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

டிமான்ட்டி காலனி 2 படம் குறித்த புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது. நடிகர் அருள்நிதி -அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவாகியுள்ள இப் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவடைந்து, ரிலீசுக்கு தயாராகி வருகின்றதாம்.

இதன் முதற்பக்கம் கடந்த 2015ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் ஹிட்டானது. அந்த படத்தில் அருள்நிதியுடன் ரமேஷ் திலக், சனத் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

இதை தொடர்ந்து, அதன் டிமான்ட்டி காலனி 2 படம் உருவாகி, ரிலீசுக்கும்  தயாராகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின பர்ஸ்ட் லுக் வெளியாகி மாஸ் காட்டியது.


இந்நிலையில் 8 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ள நிலையில், அதன் ட்ரெயிலர் வரும் 16ம் திகதி  வெளியாகவுள்ளதாக படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்


அதில், இருளுக்குள் நுழையும் நேரம் வந்துவிட்டதாகவும் அவர் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். மேலும் வித்தியாசமான போஸ்டருன் இந்த அறிவிப்பை அவர் மேற்கொண்டுள்ளார். 

எனவே, பொறுத்து இருந்து பார்ப்போம் இந்த டிரெயிலர் ரசிகர்களுக்கு எப்படியான அனுபவத்தை கொடுக்கும் என்பதை..

Advertisement

Advertisement