தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் அஜித் குமார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது.
சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித் குமார் நடிப்பை தாண்டி கார், பைக் ரேஸ்ங்கிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றார். சமீப காலமாகவே அவர் பல்வேறு சர்வதேச கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று வருகின்றார்.
சமீபத்தில் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்தின் அணி மூன்றாவது இடத்தை பெற்றது. அதன் பின்பு போர்ச்சுக்கலில் நடைபெற்ற கார் ரேஸிலும் கலந்து கொண்டார். மேலும் ஜெர்மனியில் நடைபெற்ற கார் ரேஸிலும் கலந்து கொண்டார்.
இதன்போது, நீங்கள் கார் ரேஸை பிரபலப்படுத்துங்கள்.. என்னை பிரபலப்படுத்த வேண்டாம்.. இந்திய கார் ரேஸ் வீரர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.. அவர்களை பிரபலப்படுத்துங்கள்.. இந்திய வீரர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கஷ்டப்படுகின்றார்கள் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அஜித் தன்னுடைய சம்பளத்தை 25 கோடியால் உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது அஜித் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.
ஏற்கனவே 150 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் அஜித், இந்தப் படத்திற்கு 175 கோடி சம்பளம் கேட்டு உள்ளாராம். குட் பேட் அக்லி படம் பெற்ற வெற்றியினால் தயாரிப்பு நிறுவனம் இதற்கு ஓகே சொல்லி உள்ளதாக கூறப்படுகிறது.
Listen News!