• Feb 22 2025

மீனாவை பொண்ணு கேட்டு வீட்டுக்கு வந்த நபர்! வசமாய் சிக்கிய முத்து! கடும் கோபத்தில் மீனா!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களின் மனதை வென்ற சீரியலாக இருக்கிறது. இந்நிலையில் இன்று விஜயா புகைப்படத்தினை ஒருவர் கண் திருஷ்டி அம்மன் என்று சொல்லி விற்கிறார். அதனை வாங்கி வைத்த மனோஜிக்கு நல்ல ஓடர்கள் வருகிறது. வீட்டில் விஜயா இதனை வீசுமாறு சொல்லியும் மனோஜ் ஓடர்கள் வருகிறது என கடையிலே இருக்கட்டும் என வைத்து கும்பிடுகின்றார்.


இந்நிலையில் அடுத்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் மீனாவை பின்னால் போலோ பண்ணும் நபர் முத்து சொன்னது போல பூ, பழம் எல்லாம் வாங்கிக்கொண்டு அண்ணாமலை வீட்டுக்கு வருகிறார். அங்கு வந்து  நான் it கம்பளில வேல செய்றேன், உங்க மக்களை பிடிச்சி இருக்கு கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை படுறேன் உங்களுக்கு சம்மதமான்னு கேக்குறாரு.


அதற்கு அண்ணாமலை குழப்பத்தில் எந்த பொண்ண கேக்குறீங்க என்று கேட்கிறார். அந்த நபர் அந்த பொண்ணைத்தான் என்று மீனாவை காட்டுகிறார். அதிர்ச்சி அடைந்த மீனா நீ வீட்டுக்கே வந்துட்டியா என்று அதிர்ச்சியுடன் கேட்கிறார். அப்போது சவாரி முடிந்து வீட்டுக்கு வந்த முத்து அந்த நபரை பார்த்து நீ இங்க என்ன பண்ணுற என்று கேட்கிறார். அண்ணே இது உங்க வீட்டா நான் விரும்புன பொண்ணு இவங்கதான் என்று சொல்கிறார். 


முத்துவை கண்ட மீனா என்ன போலோ பண்ற நபர் இவன் தான் என்று சொல்கிறார். இதனை கேட்ட முத்து அதிர்ச்சியில் ஓடி சென்று அந்த நபரிடம் இவ்வளோ நாள் லவ் பண்ணுறேன்னு சொன்னது இவங்களையா என்று கேட்கிறார். ஆமா என்று சொல்லி முத்து அண்ணே தான் ஐடியா கொடுத்தார் என்றும் சொல்கிறார் இதனை கேட்ட மீனா கடும் கோபத்தில் இருக்கிறார். அத்தோடு ப்ரோமோ சுவாரஷ்யமா முடிவடைகிறது.

Advertisement

Advertisement