• Jan 18 2025

தளபதி 69 படத்தின் டைட்டில் ரிலீஸுக்கு தேதி குறிச்சாச்சு..! வெளியான அதகள அப்டேட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக காணப்படும் இளையதளபதி விஜய் இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து, இன்னும் இரண்டு படங்களுடன் தான் முழுமையாகவே சினிமாவில் இருந்து விலகி அரசியலில் பயணிக்க இருப்பதாக அதிரடி காட்டிருந்தார்.

இதை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்  வெளியானது. இந்த படத்தில் விஜய் அப்பா - மகன் என இரண்டு கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் விஜய் உடன் சினேகா, லைலா, மோகன், ஜோகி பாபு, வைபவ், பிரேம்ஜி, அஜ்மல், பிரசாந்த், பிரபுதேவா என ஏராளமான நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

இதனால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. மேலும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் சமீபத்தில் மறைந்த விஜய காந்தியும் காட்சி ஒன்றில் காட்டி இருந்தார்கள். அதேபோல சின்ன சின்ன கண்கள் என்ற பாடலில் புற்று நோயால் உயிரிழந்த  பவதாரணியின் குரலையும் பயன்படுத்தி இருந்தார்கள்.


இவ்வாறு பிரம்மாண்டமாக வெளியான கோட் படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. இதனால் இந்த படம் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவி இருந்தாலும் வசூல் ரீதியாக சுமார் 450 கோடிகளை வாரிக் குவித்து இருந்தது. இதனை கோட் பட தயாரிப்பாளர் அர்ச்சனாவும் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடி இருந்தார்கள்.

இதை தொடர்ந்து எச். வினோத் இயக்கும் தனது 69 வது படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆனார் விஜய். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பாபி தியோல், பிரகாஷ்ராஜ், பிரியாமணி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளது.

இந்த நிலையில், தளபதி 69ஆவது படத்தின் தலைப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியாகும் என்றும் இந்த படத்தின் முதலாவது பஸ்ட் லுக் போஸ்டர் அடுத்த ஆண்டு ஜனவரி வெளியாகும் எனவும் தற்போது தகவல்கள் கசிந்து உள்ளன. 


Advertisement

Advertisement