• Dec 26 2024

கொடிகட்டி பறந்த அமரன் படத்திற்கு தொடர்ந்த பஞ்சாயத்து.! இறுதியில் நீதிபதி வைத்த செக்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அமரன். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே முதன்முதலாக 300 கோடி ரூபாயை வசூலில் கடந்த திரைப்படமாக அமரன் திரைப்படம் காணப்படுகிறது.

தனது நாட்டுக்காக வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்தின் உண்மையான வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் அமரன். இந்த படத்தில் மேயர் முகுந்த் கேரக்டரில் சிவகார்த்திகேயனும் அவருடைய மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்திருந்தார்கள்.

இந்த படத்தில் இராணுவ வீரராகவே வாழ்ந்து காட்டியுள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் காதல், அதன் வலி, எமோஷனல், இராணுவ பலம், அவர்களின் வாழ்கை  என ஒவ்வொன்றையும் அழகாக செதுக்கியிருந்தார்கள்.  இறுதியில் மேஜர் முகுந்தின் மரணம் பலரை கண்ணீரை கரைய வைத்திருந்தது.

d_i_a

இந்த நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் மொபைல் எண்ணோன்று காணப்பட்டது. அது தொடர்ச்சியாக சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. இதனால் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அதை மாற்றி விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


அதாவது ஹீரோயினிக்கு காதல் மலரும் போது சாய் பல்லவி தனது மொபைல் நம்பரை ஒரு பேப்பரில் எழுதி போடுவார். அந்த காட்சியில் காணப்பட்ட மொபைல் எண்ணிற்கு பலரும் போன் செய்து தொல்லை கொடுத்துள்ளார்கள். இதனால் அந்த மொபைல் எண்ணுக்கு சொந்தக்காரரான வாகீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான காரணத்தினால் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது குறித்த மனுதாரரின் மொபைல் எண் இடம் பெற்றிருந்த காட்சியை மறைக்கப்பட்டு, மாற்றப்பட்டுள்ளதாகவும் தணிக்கை குழுவிடம் புதிய தணிக்கை சான்று பெறப்பட்டுள்ளதாகவும் ராஜ்கமல் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் விளக்கம் அளித்துள்ளார்.

எனினும் தனக்கு தொடர்ச்சியாக அழைப்புகள் வருவதாக மனுதாரர் கூற, மனுதாரரின்  உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பொதுச் சட்டத்தின் கீழ் நிவாரணம் கூற முடியும் எனவும், ரீட் வழக்கில் இழப்பீடு வழங்கும் படி உத்தரவு இட முடியாது எனவும் தெரிவித்த நீதிபதி, இதற்கு பதிலளிக்குமாறு ராஜ்கமல் ஃபிலிம்ஸ், தணிக்கை குழு, இயக்குனர் ஆன ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டவர்களுக்கு உத்தரவு வழங்கி இந்த வழக்கை டிசம்பர் 20-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.


Advertisement

Advertisement