• Oct 13 2024

முத்து - மீனாவுக்கு பொடி வைத்து பேசிய ரோகிணி.. அண்ணாமலைக்கு எழுந்த டவுட்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில், சிட்டி ரோகினியிடம் முத்துவிடம் சத்யாவின் வீடியோ ஒன்று உள்ளது. அதை எடுத்து தருமாறு கேட்டுள்ளார். மேலும் சத்யா தான் விஜயாவின் பணத்தை திருடியது, அதற்காகத்தான் முத்து அவனின் கையை உடைத்தார் என உண்மையை சொல்லுகின்றான்.

இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்து ஸ்ருதியும் ரவியும் மீனாவின்  தலையில் அடிபட்டதை பார்த்து என்ன நடந்தது என்று விசாரிக்கின்றார். அதற்கு முத்து வாழைப்பழம் தடுக்கி கீழே விழுந்து விட்டார் என்று சொல்ல, அங்கு வந்த அண்ணாமலை என்னிடம் பைக்கில் இருந்து கீழே விழுந்ததாக தானே சொன்னா, என்ன நடந்தது உண்மையை சொல்லுமாறு கேட்கிறார்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மீனா, பைக்கில் சென்று திருப்பும் போது காலில் வாழைப்பழம் தடுக்கி கீழே  விழுந்ததாக சொல்கின்றார். அந்த நேரத்தில் விஜயா வரவும் ஸ்ருதியும் மீனாவும் சண்டை போடுவது போல நடிக்கின்றார்கள்.


அதன் பின்பு அங்கு வந்த ரோகினி தான் கோயிலுக்கு சென்றதாகவும் விஜயாவுக்கு இனி நேரம் நல்லா இருப்பதாகவும் ஆனால் மீனாவுக்கு தான் இனி கெட்ட காலம் ஆரம்பிப்பதாகவும் சொல்கின்றார். இடையில் முத்து காக்கா அங்கால போ.. என ரோகிணிக்கு நக்கலாக விரட்ட, ரோகிணி அந்த காக்காவை கூடிய சீக்கிரமே வீட்டை விட்டு வெளியேற்றிவிடலாம் என்று பொடி வைத்து பேசிவிட்டு போகின்றார்.

இறுதியாக மீனா காலையில் எழுந்து வேலைகளை செய்து கொண்டிருக்க, முத்து ஏன் வேலை செய்தாய் என பேசுகின்றார். அத்துடன் தனக்கு மாலை கொடுப்பதற்கு ஆடார் இருக்கு போகணும் என்று சொல்லவும், நான் உன்னை ஏற்றிப் போகின்றேன் என்று முத்து சொல்லுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement