• Sep 20 2024

தலைவரை முந்திய தளபதி! மீண்டும் முதலிடத்தில்! ஜெயிலர் வசூலை தாண்டிய கோட்!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

GOAT திரைப்படம் தற்போது வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இந்தியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் தமிழக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.  ஒரு பான் இந்திய படமாக இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ் ரசிகர்களை மனதில் வைத்தே இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.


திரைப்படம் ரஜினியின் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் தீவிரமாக இருக்கின்றனர். அந்த வகையில் தளபதி ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.


என்னவென்றால் மலேசியாவில் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை GOAT முறியடித்துள்ளது. கடந்தாண்டு வெளியான லியோ திரைப்படம் மலேசியாவில் 13 மில்லியன் வசூலித்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் 14 .1 மில்லியன் வசூல் செய்து லியோ சாதனையை முறியடித்தது.


இதையடுத்து தற்போது வெளியான GOAT திரைப்படம் 14 .3 மில்லியன் வசூல் செய்து ஜெயிலர் சாதனையை முறியடித்துள்ளது. இதன் மூலம் மலேசியா வசூலில் மீண்டும் தளபதி முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்த தகவலை கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர். 

Advertisement

Advertisement