• Jan 19 2025

பார்வதியை முறுக்கி உண்மையை வாங்கிய முத்து! விஜயா கொடுத்த மாஸ் என்ட்ரி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், நகை கடைக்கார பெண்ணாக ஸ்ருதி மனோஜிடம் போட்டு வாங்கிக் கொண்டிருக்க, உண்மையை உளற வந்த மனோஜ் உஷாராகி நான் அப்படி எதுவும் வாங்கவில்லை, சைபர் கிராமில் கம்பளைண்ட் பண்ணிடுவேன் என திட்டி விட்டு வைக்கின்றார். இதனால் முத்துவும் மீனாவும் கிளம்பி வந்து விடுகின்றார்கள்.

அதன் பின்பு மனோஜ் நேரே வீட்டுக்குச் சென்று, விஜயாவிடம் நடந்தவற்றை சொல்லுகிறார். இது முத்தோட வேலையாக தான் இருக்கும் உஷாராக இருக்க வேண்டும். நீ கெதியா நாலு லட்சத்த ரெடி பண்ணு என விஜயா சொல்லுகிறார்.


அதன் பின்பு முத்து மீனாவுக்கு போன் போட்டு உண்மையை சொல்ல சரியான ஆளு பார்வதி ஆண்டி தான். நீ அங்க வந்துடு. நானும் வந்து விடுகிறேன் என பார்வதி வீட்டுக்கு கிளம்பி செல்கிறார்கள். அங்கு பார்வதிக்கு பழங்களை கொடுத்து விட்டு பேச்சு கொடுக்கிறார் முத்து. ஒரு மாதிரியாக பார்வதி உண்மையை சொல்ல வர, அந்த நேரத்தில் விஜயா வந்து பார்வதி என கூப்பிட்டு தடுத்து விடுகின்றார். 

இதனால் இந்த பிளானும் சொதப்ப முத்து கோவத்தில் அங்கிருந்து கிளம்ப, மீனாவும் அங்கிருந்தும் கிளம்பி விடுகிறார்கள். மேலும் உண்மை எப்பயும் வெளிவரும் என்று முத்துவுக்கு மீனா ஆறுதல் சொல்ல, அந்த நேரத்தில் செல்வம் போன் பண்ணி பிரிட்ஜ் ஒன்றை வாங்க வருமாறு கூப்பிடுகிறார். ஆனால் முத்து போக மறுக்க மீனா அவரை அனுப்பி வைக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement