• Jan 18 2025

இப்படியே போட்டு கொடுத்து கொண்டே இரு.. பாக்கியம் கூறிய அறிவுரை.. மீனா, ராஜி ஆவேசம்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’  சீரியலில் இன்றைய எபிசோடில் டியூஷன் விஷயம் குறித்து பாண்டியன் திட்டியதை நினைத்து ராஜி அழுது கொண்டிருக்கும் நிலையில் கதிர் அவருக்கு ஆறுதல் கூறுகிறார். இந்த வீடு இப்படித்தான், நீ இனிமேல் இந்த வீட்டில் அட்ஜஸ்ட் செய்து வாழ்ந்து கொள்ள பழகிக்கொள்ள வேண்டும், எனக்காக பரிதாபப்பட்டு நீ திட்டு வாங்கிக் கொள்ள வேண்டாம், நீ படிப்பதை மட்டும் ஒழுங்காக கவனி’ என்று ஆறுதல் கூறுகிறார். மேலும்  முதல் முறையாக ராஜியின் கையை பிடித்து கதிர் ஆறுதல் கூறியதை அடுத்து இருவருக்கும் விரைவில் நெருக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து கோமதி, ராஜி, மீனா ஆகியோர் டியூஷன் விஷயம் எப்படி  பாண்டியனுக்கு தெரிந்தது என்று பேசிக் கொண்டிருக்கும் நிலையில் தங்கமயில் தான் கூறியிருக்க வேண்டும் என்று ராஜி கூறுகிறார்.

இந்த நிலையில் தங்கமயிலுக்கு போன் செய்யும் அவரது அம்மா பாக்கியம், இதே மாதிரி நீ மேலும் மேலும் போட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும், உன் மாமனாரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும். குட்டையை குழப்பினால் தான் மீன் பிடிக்க முடியும் என தங்கமயிலுக்கு பாராட்டு தெரிவிக்கிறார். தங்கமயிலும் சரி என்று கூறுகிறார்.

இந்த நிலையில் தங்கமயில் இடம் வரும் ராஜி மற்றும் மீனா கொஞ்சம் காட்டமாகவே ’இனிமேல் உங்கள் விஷயத்தில் மட்டும் தலையிடுங்கள், நீங்கள், உங்கள் மாமா, உங்க புருஷன் விஷயத்தை மட்டும் பேசுங்கள், எங்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்’ என்று கறாராக கூறுகின்றனர்.



இதை அடுத்து மீண்டும் அப்பாவியாக தங்கமயில் முகத்தை வைத்துக்கொண்டு ’நான் ஒன்றுமே செய்யவில்லை, தற்செயலாக மாமா ஒரு விஷயத்தை கேட்டார், அப்போது தான் நான் டியூஷன் விஷயத்தை சொன்னேன்’ என்று கூறுகிறார். ஆனால் மீனா மிகவும் கண்டிப்பாக எங்கள் விஷயத்தில் இனிமேல் எங்கள் தலையிடக்கூடாது என்று கூறியது தங்க மயிலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இனிவரும் எபிசோடுகளிலும் தங்கமயில் மேலும் மேலும் போட்டுக் கொடுத்துக் கொண்டு இருப்பார் என்று தான் எதிர்பார்க்கப்படுவதால் மீனா மற்றும் ராஜி அடுத்தடுத்து என்ன செய்வார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். மேலும் நாளைய எபிசோடின் முன்னோட்டத்தில் பாண்டியனிடம் ’மீனாவை நீங்கள் தட்டியது தவறு’ என்று முதல்முறையாக தைரியமாக செந்தில் பேசுகிறார்.

Advertisement

Advertisement