நடிகை சமந்தா நடிப்பு, தொழில் என பிஸியாக வலம் ஒரு முன்னணி நடிகை. காதல் வாழ்க்கை, கல்யாண வாழ்க்கை எல்லாம் தன்னை கைவிடவே மனமுடைந்து போன சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.
தற்போது ஓரளவு தெரிய நிலையில் மீண்டும் கம் பாக் கொடுத்துள்ளார். படங்களை தாண்டி வெப் தொட்ர்களில் பிஸியாக நடிக்க கமிட்டாகி வருகிறார். கடைசியாக "சிடாடல் ஹனி பன்னி" என்ற வெப் தொடரில் நடித்து மிரட்டி இருந்தார்.
இது குறித்து புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சமந்தா பேசுகையில், வெப் தொடரில் ஒரு அம்மாவாக நடித்துள்ள சமந்தா, எனக்கும் அம்மாவாக வேண்டும் என்ற கனவு உள்ளது. இப்போது ஒன்றும் கால தாமதம் ஆகவில்லை, எனக்கு தாயாக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, அது அழகான அனுபவம். அதை நான் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் உங்கள் ஆசை நிறைவேறும் என்று கமெட் செய்து வருகின்றனர்.
Listen News!