• Dec 04 2024

காதலர்களை ஒன்று சேர்க்க கொக்கி போடும் மணிரத்தினம்! 3வது முறையாக சேரும் கூட்டணி...

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இவர் இயக்கத்தில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் பாகம் 2 வெளியாகி இருந்தது. பாகம் 1 போலவே இதும் மாபெரும் வெற்றி அடைந்தது. இதற்காக பல விருதுகளை வென்றது பொன்னியின் செல்வன் குழு. 


இந்நிலையில் ராவணன் படக் கூட்டணி மீண்டும் இணைந்து ஒரு புதிய படத்தில் பணியாற்றவுள்ளனர். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இவர் நடிகை கமலஹாசனை வைத்து தக்லைஃப் திரைப்படத்தினை இயக்கிவருகிறார். நாயகன் படத்திற்குப் பின் சுமார் 30 ஆண்டுகள் கழித்து மணிரத்னம் – கமல் கூட்டணியில் உருவாகி வரும் படம் தக்லைஃப். 

d_i_a


தக் லைப் திரைப்படத்தின் பின்னர் 3 வது முறை ஐஸ்வர்யா, அபிஷேக், மணிரத்னம் கூட்டணி அமைக்கவுள்ளனர். ஏற்கனவே இந்த ஜோடியின் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான படமும் சரி, பாடல்களும் சரி வேற லெவல் வெற்றி தந்தது. 


சில மாதங்களாக, ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்துவருவதாகச் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் இருவரும் சேர்ந்து நடிப்பதாக கூறப்படுகிறது. அதிகார போர்வமான அறிவிப்பு இனி வரும் களங்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது. 

Advertisement

Advertisement