• Nov 12 2025

நடிகர் ஷாருக்கானுக்கு வந்த கொலை மிரட்டல்! கைது செய்யப்பட்ட மர்ம நபர்!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் வந்துது. அடையாளம் தெரியாத நபர் ரூ. 50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து மும்பை பந்த்ரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சைபர் குற்றப்பிரிவு போலீசாருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 


d_i_a

இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நகரில் வசித்து வரும் முகமது பைசான் கான் என்ற வழக்கறிஞர்தான் மிரட்டல் விடுத்ததாக அவரது வீட்டில் வைத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.


தான் அழைப்பு ஏற்படுத்தியதாகவும், அந்த தொலைபேசியை தொலைத்து விட்டதாகவும் அவரே போலீசாரிடம் கூறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்னர் சல்மான் கானுக்கும் இதே போன்று கொலை மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement